விக்கிமேனியா
On August 9–13, 2017 we enjoyed:
five keynote sessions from world-renowned experts,
more than a hundred community-submitted talks,
two days of hackathon and preconferences,
and over a dozen workshops on topics including:
விக்கிப்பீடியாவைப் போலவே விக்கிமேனியாவும் ஒரு லாபநோக்கற்ற அடிப்படையில் இயக்கப்படுகிறது - இது முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் மட்டுமே தொகுத்து இயக்கப்படும் இந்த எண்ணம் ஈடேற உங்கள் அனைவரின் உதவியும் தேவை!
விக்கிமேனியாவிற்கான அணுகலானது சிறந்த வெளிப்பாட்டையும் முதன்மையான வர்த்தக இணைப்பையும் கொண்டுவருகிறது.
விக்கிமேனியா என்றால் என்ன?
இந்தக் கருதத்தரங்கின் கருப்பொருளானது, கட்டற்ற அறிவின் முன்னேற்றம், இயக்கத்தில் கல்வி மற்றும் கலாச்சார மையங்களின் பங்கு, உரிமைகள் மற்றும் தனியுரிமை, இவ்வனைத்துக் குறிக்கோள்களின் மீதான தொழில்நுட்பத்தின் பங்கு ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். மேலும் இயக்கத்திற்குள் பிராங்கோபோனியின் பங்கு, பிரெஞ்சு மொழியை முன்னேற்றப் பாடுபடும் திட்டங்கள் ஆகியவற்றின்மீதும் விக்கிமேனியா 2017 ஒரு தீர்க்கப் பார்வையைச் செலுத்தும்.
முக்கிய நிகழ்வுகளைத் தவிர்த்து மற்ற பிற ஒத்த நிகழ்வுகளும் உள்ளன: விக்கிமீடியா திட்டங்களின் தொழில்நுட்பக் குழுக்கள் இணைந்து பணியாற்றி பங்களிக்கும் 'ஊடோட்டம்'('Hackathon'), ஒத்த கருத்துடைய அனுபவசாலிகளும் புதியவர்களும் இணைந்து, எழுதப்பட்ட வரலாற்று ஆவணங்களை பாதுகாத்தல் மற்றும் வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளும் 'மூலவோட்டம்' ('Sourcethon').
இந்த நிகழ்வானது ஆகத்து மாதம் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை, கனடாவின் மாண்ட்ரீயலில் உள்ள ஷெரட்டன் மாண்ட்ரீல் மையத்தின் உள்ளும் மற்றும் அதனைச்சுற்றியும் நடைபெறும். நீங்கள் கைதேர்ந்தவரோ, ஆர்வலரோ, கற்றுக்குட்டியோ அல்லது வெறும் ஆர்வமுள்ளவரோ, எவ்வாறானாலும் சரி, அனைவரும் வருக!